மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக, காங்கிரசை போர்க்குற்றவாளிகளாக்கி தண்டிக்கக் கோரும் தீர்மானத்தை ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
பின்னர் பேசிய இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, இலங்கையில் இறுதிப்போரின்போது, இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரசும், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக-வும் தான் போரில் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டதற்கு காரணம் என்று கூறினார்.
இலங்கையில் 40 ஆயிரம் பெண்கள் உள்பட 1.30 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு, போர் நடந்தபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதியும், துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினும் தான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார்.
இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், வரும் 25-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
———-
————–