2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் -செங்கோட்டையன்

சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாதிரி பள்ளிகளின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். இதனையடுத்து, விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். 1, 6, 9, மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், 2,7, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். குறிப்பாக, அடுத்த கல்வி ஆண்டு முதல் 2 அயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக தற்போது சமூக நலத்துறையுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருதாக அவர் தெரிவித்தார். மேலும், 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

Exit mobile version