விருதுநகர் மாவட்டம், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவர்கள் காளீஸ்வரன், ஜெயந்த் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்தனர், அதேபோல், எதிரே மற்றொரு இரு சக்கர வாகனத்தில் காவலர் கார்த்தி பாண்டியன் மற்றும் அவரது நண்பர் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். இருவரும் பாறைப்பட்டி விளக்கு அருகே எதிரெதிரே வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இரண்டு இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. விபத்தில் மாணவர்கள் காளீஸ்வரன், ஜெயந்த் மற்றும் காவலர் கார்த்தி பாண்டியன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.