முதலமைச்சர் தலைமையில் 2-வது நாள் ஆலோசனை கூட்டம்

முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனை கூட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் 13 மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வு செய்ய வேண்டும் என்றார். ஆய்வறிக்கையை ஒவ்வொரு மாதமும் முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version