அந்தியூர் பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில், ஈரட்டி,பெஜலட்டி, மடம், தேவர்மலை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
தாமரை கரையில் இருந்து, ஈரட்டி செல்லும் வழியில் இரு புறங்களிலும் மூங்கில் தோப்புகள் உள்ளன. யானைகளில் முக்கிய உணவான மூங்கில் கூழை சாப்பிடுவதற்கு இரவு நேரங்களில் யானைகள் அப்பகுதியில் முகாமிடுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மூங்கில் கூழை சாப்பிட வந்த காட்டு யானை ஒன்று சாலையின் குறுக்கே சுமார் 2மணி நேரம் நின்று கொண்டிருந்தது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் காட்டுயானையை கடந்து செல்ல துணிவில்லாமல் 2 மணி நேரம் காத்திருந்தனர்.