விடாது பெய்த கனமழை – தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்

பர்கூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, காட்டாற்று வெள்ளம் தரைப் பாலத்தை மூழ்கடித்தவாறு சென்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர்மலை, தேவர்மலைப் பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், பர்கூர் பகுதியில் உள்ள தரைப் பாலத்தை முழுவதுமாக மூழ்கடித்தவாறு சென்றது. இதன் காரணமாக அந்த தரைப் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இதேபோல் அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் பாலத்தின் இரு முனைகளிலும், வெள்ள நீர் வடியும்வரை வரிசையாக காத்திருந்தன. சுமார் 4 மணி நேரம் வரை இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில் அங்கு, பாலம் கட்டித் தர வேண்டும் என தமிழக அரசுக்கு, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version