பொறியியல் படிப்பில் சேர இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 767 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக்., படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியேயும், தமிழகத்தில் உள்ள 42 சேவை மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tndte.gov.in மற்றும் www.tneaonline.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் 31 ஆம் தேதி வரை பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 3 ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது.
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்னும் மூன்று தினங்களில் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 767 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.