பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஏற்கனவே சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

பொது கலந்தாய்வு கடந்த ஆண்டு முதல் ஆன்-லைனிலேயே நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கலந்தாய்வும் ஆன்-லைனில் நடைபெறும். இன்று தொடங்கும் பொது கலந்தாய்வு 28-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. 29-ந் தேதி துணை கலந்தாய்வு நடக்கிறது. இணையதள வசதி இல்லாத மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்ற உதவி சேவை மையங்களை அணுகி கலந்தாய்வில் பங்கு பெறலாம்.

Exit mobile version