தீபாவளி பண்டிகை – சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார்

தீபாவளி பண்டிகை – சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார்

தீபாவளி பண்டிகையையொட்டி ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பெருங்களத்துரில் இருந்து செங்கல்பட்டு டோல்கேட் வரை ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களால், சென்னை புறநகர் பகுதியான ஜிஎஸ்டி சாலை முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்து காணப்படும் என்பதால், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்து இருநூறு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பெருங்களத்தூரிலிருந்து செங்கல்பட்டு டோல்கேட் வரை 200 மீட்டருக்கு ஒரு காவலர் வீதம் ஆயிரத்து 200 காவலர்கள் சுழற்சி முறையில், ஆறு நாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் நடவடிக்கையால் வெளியூர் செல்லும் பயணிகள் சிரமம் இன்றி சென்றனர்.

Exit mobile version