10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவங்கவுள்ள நிலையில், அரசுத் தேர்வுத் துறை சார்பில் அமைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறகிறது. இத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவர்களும் 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்களும் எழுதவுள்ளனர். இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மூவாயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 213 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், தேர்வினை 152 கைதிகள் எழுதுவதற்கு வசதியாக புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய சிறைச்சாலைகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அறைக் கண்காணிப்பாளர் பணியில் 49 ஆயிரம் ஆசிரியர்களும் தேர்வு மையங்களை பார்வையிடும் பணியில் ஐந்தாயிரத்து 500 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.