10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பள்ளிகள் திறப்பது ஆகியவை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.