சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பகுதியில் பரவிவரும் காட்டு தீயை கட்டுப்படுத்த 100 தண்ணீர் லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக காட்டுதீ பரவி வருகிறது. மலை பகுதி மட்டுமல்லாமல் அடிவாரத்தில் உள்ள கருங்காலி கிராமத்தை சுற்றி உள்ள வன பகுதிகள் எரிந்து சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் ஏற்காடு மலை பகுதியில் காட்டு தீ பரவி வரும் இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காட்டுத் தீயை கட்டுப்படுத்த தற்போது 30க்கும் மேற்பட்ட டேங்கர் வாகனங்கள் இடைவிடாமல் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், மேலும் 100 தண்ணீர் டேங்கர் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.