வங்கதேசத்தில், தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறை மற்றும் மோதலில், காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று ஆளுங்கட்சித் தொண்டர் ஒருவரை, எதிர்க்கட்சித் தொண்டர்கள் அடித்துக் கொன்றனர். இதனால், சட்டோகிராம், ராஜ்ஷாஹி, தினாஜ்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வன்முறை மற்றும் மோதல் வெடித்தது.
இந்த வன்முறையில் காவல் துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 64 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் பதற்றம் நிலவி வருவதால் முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.