ஸ்மார்ட் போன்களுக்கு தடை – இம்ரான் கான் அதிரடி

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். ஆடம்பர கார்களில் அமைச்சர்கள் பயணம் செய்ய தடை விதித்த அவர், சொகுசு ஹெலிகாப்டரில் பயணம் செய்வதை தவிர்த்து வருகிறார். இந்த நிலையில், ஸ்மார்ட் போன்களை இறக்குமதி செய்ய இம்ரான் கான் தடை வித்தித்துள்ளார். பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் செல்போன்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று, சொகுசு கார்கள், பாலாடைக்கட்டி, வெண்ணை ஆகியவற்றை இறக்குமதி செய்யவும் அவர் தடை விதித்துள்ளார். பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்த இத்தகைய நடவடிக்கை அவசியம் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Exit mobile version