வேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடமாக 80 கோடி செலவில் கட்டப்படும்

வேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடமாக 80 கோடி செலவில் கட்டப்படும், திருமழிசையில் 150 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் போன்ற பல முக்கிய அறிவிப்புகளை துணை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். பதிலுரைக்கு பிறகு பல புதிய அறிவிப்புகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதன்படி, மும்பையில் புதிய தமிழ்நாடு இல்லம் அமைக்கப்படும், மதுரை மாவட்டத்தில் 88 லட்சம் செலவில் முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்துடன் கூடிய புதிய மைய கட்டடம் கட்டப்படும், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்த 5 ஆயிரத்து 542 பேருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவிகள் 7 கோடியே 69 லட்சம் கூடுதல் செலவில் உயர்த்தி வழங்கப்படும் போன்ற பல புதிய அறிவிப்புகளை துணை முதலமைச்சர் வெளியிட்டார்.

Exit mobile version