விரைவில் இசை வெளியீட்டு விழா – சர்கார் படக்குழு

 துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் மற்றும் முருகதாஸ் மூன்றாவதாக கைக்கோர்க்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.

இவர் விஜயின் பைரவா படத்தில் ஜோடியாக நடித்தவர். மேலும் அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர்.

வரலட்சுமி, யோகிபாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஈ.வி.பி பிலிம்சொசைட்டியில் பிரம்மாண்டமாக அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version