சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் – ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் தகவல்

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் விஜயை வைத்து இயற்றிய “சர்கார்” படத்தின் கதை தன்னுடைய கதை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் கதாசிரியர் வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேலும், படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், “சர்கார்” படத்தின் வழக்கு நீதிபதி சுந்தர் அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “சர்கார்” படக்குழு சார்பில் ஆஜரான வக்கீல் கதை உரிமை கோரியது தொடர்பாக கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதனால், சர்கார் படத்தின் தீர்ப்பை நீதிபதி சுந்தர் சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார்.

இதற்கிடையே விசாரணையை நேரில் காண்பதற்காக பாக்கியராஜ் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

Exit mobile version