சர்ச்சைக் காட்சிகளை நீக்கும்வரை 'சர்கார்' படத்தை திரையிடக்கூடாது – மதுரையில் அ.தி.மு.க.வினர் போராட்டம்

‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி, மதுரையில் திரையரங்கு ஒன்றை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் பங்கேற்று, நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

வன்முறையைத் தூண்டும் விதமாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அ.தி.மு.க.வினர், தயாரிப்பாளர் கலாநிதி மாறனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, அ.தி.மு.க. அரசின் நலத்திட்டங்களை அவதூறாக சித்தரித்துள்ளதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் வரை, ‘சர்கார்’ படத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்தார்.

Exit mobile version