விமான விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி

இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்.27 ரக விமானம், ஜோத்பூர், பனாட் பகுதியில் கிழே விழுந்து நொறுங்கியது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விமானத்தில் பயணித்த விமானி, கிழே குதித்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை மற்றும், காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

Exit mobile version