5 மாநில சட்டசபை தேர்தல் : பிந்தைய கருத்துக்கணிப்புகள்வெளியீடு

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ.கவிடமிருந்து காங்கிரஸ் ஆட்சி கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தானுக்கு நடந்த 199 இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கான தேர்தலில், 102 முதல் 120 தொகுதிகள் வரை பா.ஜ.க கைப்பற்றும் எனவும், 104 முதல் 122 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் இந்தியா டுடே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கணிப்பில் பா.ஜ.க 118 இடங்களையும் காங்கிரஸ் 105 இடங்களையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 90 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என இந்தியா டுடே மற்றும் ரிபப்ளிக் சி ஓட்டர் நிறுவனம் கணித்துள்ளது. பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும் என டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

மிசோரமில் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மிசோரம் தேசிய முன்னணி இரண்டுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கணிப்புகள் தெரிவித்துள்ளன.

Exit mobile version