2009-ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் சென்னையில் இருந்து விமானத்தை இயக்கி கொழும்பு நகரைத் தாக்க திட்டமிட்டிருந்தனர் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா.சபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு கூறினார்.
விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இறுதிக்கட்டப் போர் உச்சத்தில் இருந்தபோது, விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலுக்கு அஞ்சி முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் பிரதமரும் எங்குச் சென்றார்கள் எனத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புத்துறையை கூடுதலாகக் கவனித்துவந்த அவர், நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களையும் நாட்டை விட்டு வெளியே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தாகவும் தெரிவித்தார். அதேவேளை சென்னையில் இருந்தோ அல்லது வேறுஏதோ காட்டுப்பகுதியில் இருந்தோ விமானம் மூலம் கொழும்பு நகரை விடுதலைப்புலிகள் தாக்கக்கூடும் என்பதைத் தெரிந்து கொண்டதால் கொழும்பு நகரைவிட்டு வேறு இடத்தில் தங்கி நிலவரங்களைக் கவனித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.