வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ், எதிர்க்கட்சியாகவும் தோல்வி அடைந்து விட்டது – பிரதமர் மோடி

வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ், எதிர்க்கட்சியாகவும் தோல்வி அடைந்து விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வலிமையான எதிர்க்கட்சி அவசியம் என்று கூறினார். 60 ஆண்டு காலம் நாட்டை ஆட்சி செய்ததில் தோல்வி அடைந்ததோடு, எதிர்க்கட்சியாக செயல்படுவதிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டதாக மோடி விமர்சித்தார்.

வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் கட்சிகள் பதவிக்கு வந்தால், அரசு அதிகாரிகளிடம் பிளவை ஏற்படுத்தி, அதிகாரத்துவத்தை அழித்து விடுவார்கள் என்று அவர் எச்சரித்தார். வாக்கு வங்கி அரசியல் வளர்ச்சிக்கு தீங்கானது என்று எச்சரித்த பிரதமர்,
ஆரோக்கியமான ஜனநாயகத்தில் வலுவான எதிர்க்கட்சி அவசியம் என்று கேட்டுக் கொண்டார். தான் பிரதமராக இருந்த போதும், பாஜகவில் சாதாரண தொண்டனாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version