ராகுல் காந்தி மீது ரவிசங்கர் பிரசாத் பாய்ச்சல்

பாகிஸ்தானுக்கு ராகுல் காந்தி உதவி செய்வதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

ரஃபேல் விமான கொள்முதலில், ராகுலின் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிரதமர் மோடி நேர்மையின் சின்னம், அடையாளம் என்று அவர் வர்ணித்தார். சுதந்திர இந்தியாவில் எந்தக் கட்சியின் தலைவரும் பிரதமரை இதுபோன்று மரியாதைக் குறைவான வார்த்தைகளால் பேச முடியாது. ராகுல் காந்தியிடம் இருந்து இதற்கு மேல் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

அனைத்துவிதமான ஆயுதக்கொள்முதல் விவகாரங்களையும் வெளிப்படையாக்கி, ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு உதவுகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனமும், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனமும் கடந்த 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் கூறினார். ராகுல் காந்தி யார் எழுதிக்கொடுத்ததைப் படிக்கிறார் என்றும் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version