கைலாஷ் மானோசரோவருக்கு புனித யாத்திரை செல்வதாக அண்மையில் ராகுல் அறிவித்தார். இது மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தும் செயல் என பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் ராகுல் உணவு சாப்பிடுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியானது. ராகுல் சாப்பிடுவது சிக்கன் என பா.ஜ.க.வினர் சிலர் சாடினர்.
பின்னர் மானோசரோவரில் எடுத்த சில புகைப்படங்களை ராகுல் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் போலியானவை என பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டினர். அந்த புகைப்படங்கள் உண்மை தான் என டைம்ஸ் ஆப் இந்தியா தனது புலனாய்வு குழு மூலம் உறுதி செய்தது. இந்த அளவிற்கு ராகுலின் யாத்திரையால் சர்ச்சைகள் எழுந்தன.
ராகுல் உண்மையிலேயே மானோசரோவரில் தான் இருக்கிறார் என்றால் அங்கிருந்து செல்பி எடுத்து போடலாமே என சமூக வலைதளங்களில் பா.ஜ.க.வினர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் ராகுல் காந்தி மானோசரோவில் இருப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதனை வீடியோ என்று சொல்வதை விட, பா.ஜ.க.வினரின் விமர்சன அம்புகளை தடுக்கும் கேடயம் என்று சொல்லலாம். ஒரு வழியாக புனித யாத்திரை சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/ANI/status/1037934982138920960