ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்குகிறது இந்தியா

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி  ரஷ்யாவிடமிருந்து அதிநவீன வான்வெளி பாதுகாப்பு மற்றும் போர் கருவிகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ரஷ்யாவிடமிருந்து எஸ்  400 ரக கருவிகளை வாங்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கருவிகள் மூலம், எதிரி நாட்டின் போர் விமானம், ஆளில்லா உளவு விமானம் என அனைத்தையும் சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் வரும்போது, அவற்றை அடையாளம் காண முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா கொண்டு வந்துள்ள புதிய சட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் இருநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version