விருத்தாசலத்தில் மூடிக்கிடந்த செராமிக் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டதால் 5 ஆயிரம் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்திலேயே மிகவும் பிரபலமான பீங்கான் தொழிற்பேட்டை விருத்தாசலத்தில் இயங்கிவருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பீங்கான் பொருட்களானது பல்வேறு மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த பீங்கான் செய்யும் தொழிலை நம்பி சிறு, குறு தொழிலாளர்கள் என சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களின் குடும்பங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் , இந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் செராமிக் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இதனையடுத்து தொழில்துறை அமைச்சர் சம்பத், ஆலையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி, அரசு செராமிக் சூடு சூளையானது மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.