இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நன்நாளில் நால்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மாணவ மாணவியர் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அந்த அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், மடிக் கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள் , புதிய பாடத்திட்டங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் போன்ற விருதுகளை வழங்கி சிறப்பித்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் ஆசிரியர் பெருமக்களின் சேவை மென்மேலும் சிறக்க வேண்டுமெனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.
முதலமைச்சர் ஆசிரியர் தின வாழ்த்து
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: ஆசிரியர் தின வாழ்த்துதமிழக முதலமைச்சர்
Related Content
'நியூஸ் ஜெ' செய்தி எதிரொலி - முதலமைச்சர் தனிப்பிரிவில் சேர்க்கப்பட்ட மாவட்டங்கள்
By
Web Team
June 15, 2021
வறட்சியை எதிர்கொண்டு, வளர்ச்சியை கொண்டு வந்தது அதிமுக அரசு தான் - முதலமைச்சர் பெருமிதம்
By
Web Team
December 27, 2020
2021 சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை துவங்கினார் முதலமைச்சர்
By
Web Team
December 19, 2020
ட்விட்டரில் முதலமைச்சரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது!
By
Web Team
October 14, 2020
முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல்!
By
Web Team
October 13, 2020