"மாம்பாக்கத்தில் ரூ. 137 கோடி மதிப்பில் துணை மின் நிலையம்"

மாம்பாக்கத்தில் 230 கிலோ வாட் துணை மின் நிலையம் ரூ. 137 கோடியே 37 லட்சம் செலவில் அமைக்கப்படும் என எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மேலும் சில முக்கிய அறிவிப்புகள்…

வியாசர்பாடி, குக்சாலை, கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையம் ஆகிய துணை மின்நிலையங்களையும் மின் சுமையை குறைக்கும் வகையில், மதுரவாயல், எழும்பூர், ஐ.சி.எப் உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள 33 கிலோ வாட் துணை மின் நிலையங்கள் அந்தந்த இடங்களிலேயே 203 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் 110 கிலோ வாட் வளிம காப்பு துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

சென்னை புறநகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதத்தில், முக்கிய சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 216 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் செயலாக்கத்தில் உள்ளன.

தொடர்ச்சியாக முக்கிய சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள், ரூ. 344 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதியில் 2 கட்டங்களாக 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு, சாலை விரிவாக்க பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன.

3 ஆம் கட்டமாக விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதியில், 125 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை கட்டம் 2, 33 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் ஆவடி அருகே 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அகலப்படுத்தப்படும்.

தில்லை கங்கா நகரில் உள்ள ரயில்வே கீழ் பாலத்திற்கு கூடுதலாக மேம்பாலம் கட்டும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை 50 லட்சத்து, 59 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை திருத்தணி ரேணிகுண்டா சாலையில் கிலோ மீட்டர் 75/6 இல் ரயில்வே மேம்பாலம் அமைக்க 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

சென்னை உள்வட்டச் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகில் நடைமேம்பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்படு வருகிறது.

Exit mobile version