பெண்களிடம் வரம்பு மீறுவோரை திமுக அனுமதிக்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், தனி நபரை விட கட்சியே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுவோர், பொதுமக்களை அச்சுறுத்துவோர், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமாக செயல்படுவோர் என யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுப்பதாக கூறியுள்ளார்.
கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட பிரச்சினைகள், விறுப்பு வெறுப்புகளை கொண்டு அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.க. அனுமதிக்காது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.