பெட்ரோல் விலை நவம்பர் மாதம் மேலும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தினமும் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் நவம்பர் மாதத்திலிருந்து ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து ஈரானிய எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைக்கத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.
இந்த நிலையில், சர்வதேச நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியா அடுத்த மாதம் ஈரானின் கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் அல்லது குறைக்க வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் பெட்ரோல் விலை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்