நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு புதிய அரசு கட்டடம், சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் அளிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டார். கிராமிய இசையுடன் கொல்லிமலை வாழ் மக்கள் சார்பில் அமைச்சர் தங்கமணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் தங்கமணி, திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து, ஆரியூர் நாடு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டார். பின்னர் பேசிய அவர், தமிழக அரசு பொது மக்களின் தேவைகளை அறிந்து செயலாற்றும் வகையில் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். கொல்லிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பான தங்கும் விடுதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கொல்லிமலையில் 270 கோடி ருபாய் மதிப்பீட்டில் 20 மெகாவாட் உற்பத்தி செய்யக் கூடிய புதிய நீர் மின் நிலையம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
புதிய நீர் மின் திட்டம் தொடங்கப்படும் – அமைச்சர் தங்கமணி
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: அமைச்சர் தங்கமணிகொல்லிமலைபுதிய நீர் மின் திட்டம்
Related Content
அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் தங்கமணி!
By
Web Team
March 31, 2021
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சான்றிதழ்!
By
Web Team
November 30, 2020
சென்னை முழுவதும் புதைவடக் கம்பிகள் அமைக்கப்பட உள்ளது: அமைச்சர் தங்கமணி
By
Web Team
March 17, 2020
மூன்றரை ஆண்டுகளில் 7 லட்சம் பேருக்கு மின் இணைப்பு -அமைச்சர் தங்கமணி
By
Web Team
February 29, 2020
நாமக்கல்லில் அமையவுள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு விரைவில் அடிக்கல்: அமைச்சர் தங்கமணி
By
Web Team
February 7, 2020