மேகதாது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், கர்நாடகாவின் நடவடிக்கை காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேகதாது திட்டத்துக்கான ஒப்புதலுக்காக கர்நாடக அரசு தமிழக அரசை அணுகவில்லை என்று அவர் கூறியுள்ளார். கர்நாடகாவின் சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலிக்க வேண்டாம் என மத்திய நீர்வள ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். காவிரி வடிநில மாநிலங்களின் அனுமதியின்றி கர்நாடக அரசு அணை கட்டக் கூடாது என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கர்நாடகத்தின் அணை கட்டும் நடவடிக்கை லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: பழனிசாமி கடிதம்பிரதமர் மோடிமேகதாது அணை
Related Content
காவிரி - குண்டாறு இணைப்பு: எதிர்க்கும் கர்நாடக அரசு
By
Web Team
July 20, 2021
மேகதாது அணை எதிர்ப்பு : அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகள் என்ன?
By
Web Team
July 12, 2021
தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்!
By
Web Team
November 16, 2020
உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
By
Web Team
October 3, 2020
அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பாதிப்பு!
By
Web Team
October 2, 2020