சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் சென்றார். கனடாவில் ஆராய்ச்சி படிப்பை முடித்து விட்டு வந்த சோஃபியா அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். இந்நிலையில் தமிழசையை கண்டதும் ஆத்திரமடைந்த அவர் பாஜக ஒழிக என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தமிழிசைக்கும், சோஃபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோஃபியாவை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டன. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில், சோஃபியா மீதான வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம், அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தர விட்டது . சோஃபியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, பெற்றோர் உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்று உத்தர விட்டார்.