தூத்துக்குடி சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறாது!

தூத்துக்குடி முத்தாரம்மன் கோயில் திருவிழாவிற்கு, வெளி மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி முத்தாரம்மன் ஆலய திருவிழா, அக்டோபர் 17ஆம் தேதி குலசை தசரா கொடியேற்றத்துடன் தொடங்கி, 27ஆம் தேதி மகிசாசுர சம்ஹாரத்துடன் நிறைவுபெறுகிறது. இந்த விழாவையொட்டி, காப்பு கட்ட அனுமதிக்கப்பட்ட 400 குழுவினர் சார்பாக, இரண்டு பேர் மட்டும் வந்து காப்பு வாங்கிச்செல்ல ஆட்சியர் சந்தீப் நந்தூரி அனுமதி அளித்துள்ளார்.

இதற்காக, வரும் 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவுசெய்து செய்துகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வழக்கமாக கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்வு, இந்த ஆண்டு ஆலய வளாகத்திலேயே நடைபெறும் என்று கூறினார். மேலும், வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வர அனுமதியில்லை என்றும், தற்காலிக கடைகள் அமைக்கக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Exit mobile version