பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை

ஆயுதங்களுடன் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதனை செய்துள்ளது.

அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் அதிநவீன ‘கவுரி’ ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்த சோதனை வெற்றிக்கு, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் தனது உள்நாட்டு தயாரிப்பான, போர் ஆயுதங்களுடன் சுமார் 700 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் ‘பாபர்’ ஏவுகணையை கடந்த ஏப்ரல் மாதம் பரிசோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version