பாகிஸ்தான்..மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில், போலீசார் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், போலீஸ் வாகனம் மீது மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இதில் போலீசார் வாகனம் நொறுங்கிய நிலையில், 9 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 15 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் சமீப காலமாக இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version