எகனாமி மான்ஸ்டர்..! ஜாக் மா மேற்கொண்ட ரகசியப் பயணம்..! உலகப் பொருளாதாரம் என்னவாகப் போகிறது?

சர்வதேச அளவில் ஜாக் மா:

கோடீஸ்வரர்கள் என்றதுமே நமக்கு முதலில் நியாபகம் வருவது டாடா பிர்லாதான். அப்படிப்பட்ட வரிசையில் சர்வதேச அளவில் தொழில் துறையில் ஜாக் மா என்றால் தெரியாதவர்கள் தொழில்துறையில் இருக்க மாட்டார்கள். இவர் சீன நாட்டின் மிகப் பெரிய  கோடீஸ்வரராக அனைத்து துறைகளிலும் இன்றளவும் வலம் வருகிறார் ஜாக் மா அவர்கள். இவரை வளர்த்து விட்டதில் முக்கிய பங்கு சீன அரசிற்கு உள்ளது என்றும் சொல்லலாம். ஏனென்றால் ஒரு தொழில் துறையில் அதற்கான முன்னேற்றங்களை  எப்படி வளர்ப்பது என்பதிற்கு ஓரு முக்கிய எடுத்துக்காட்டாக ஜாக் மா முன்னிறுத்தியது. இவரது தொழில் நிறுவனங்கள் அனைத்து நாடுகளிலும் தொடங்க ஆரமித்தது. இவரது அலிபாபா நிறுவனமானது இந்தியாவில் கால் பதிக்க ஆரம்பித்தது. இந்த நிறுவனமானது இந்தியர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது. இப்படியான நிலை இருக்க சீனா அரசின் மீது ஜாக் மா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கான பலனாக சீன அரசிடம் இருந்து பல்வேறு வகையில் பிரச்சனைகளை சந்தித்தார் ஜாக். இப்படியாக பரப்பரப்பாக இயங்கி கொண்டிருந்த ஜாக் மா அவர்கள் திடீரென அமைதியாகி விட்டார்.  இவரின் சைலெண்ட் மோடிற்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தனர் பலர். புலி பதுங்குவது பாய்வதற்கு தான் என்பதை போல இவர் சைலண்ட் ஆக இருந்து பல காரியங்களை செய்துள்ளார்.

ரகசியப் பயணம்:

அப்படி இவர் செய்தது என்னவென்றால் இவ்வளவு நாட்களாக காணாமல் போன ஜக் மா அவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதனால் இவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு தலைப்பு செய்தியாகியுள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று இவர் குறித்த செய்தி ஒன்றினை வெளியிட்டது. இதனால் பெரும் பரப்பரப்பு நிலவ ஆரம்பித்தது. அவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?  இவர் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி ஹாங்காங்கில் இருந்து லாகூர் சென்ற ஜாக் மா, அங்குள்ள அரசுக்கு சொந்தமான விடுதி ஒன்றில் ஒரு நாள் முழுவதும் தங்கி உள்ளார். என்று இன்வஸ்ட்மென்ட் முன்னாள் தலைவர் முகமது அஸ்பர் அஹ்சானும் உறுதி செய்துள்ளார். அந்த பயணத்தின் போது ஜாக் மா அவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. அரசு அதிகாரிகளையோ, ஊடகவியலாளர்களையோ அவர் சந்திக்கவில்லை என்ற தகவல் தெரியவந்தது.   இதன் மூலம் ஜாக் மா உடன் சீனாவை சேர்ந்த ஐந்து தொழிலதிபர்கள், டேனிஷை சேர்ந்த இருவர், ஒரு அமெரிக்கர் ஆகியோர் இவருடன் சென்றுள்ளனர்.

இதன்மூலம் தொழில் ரீதியாக பாகிஸ்தான் சென்று இருக்கலாம் என்று கூறுகின்றன.  தொழில் ரீதியாக பாகிஸ்தானில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். இதன் மூலம் ஜூன் 30 ஆம் தேதி அன்று தனியார் ஜெட் விமானத்தின் மூலம் புறப்பட்டார். இந்த பயணத்தில் குறிப்பிடுவது போல ஜாக் பாகிஸ்தானில் முதலீடு செய்கிறார் என்றால் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் முன்னேற வாய்ப்பு உள்ளதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. இவரின் தொழில் முறையானது புரட்சிகரமாகவும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் பணியாகத்தான் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. மேலும் ஆலோசனை கூட்டத்தில் ஐடி தொழில்கள் குறித்தும் அதன் அனுபவங்களையும்  பாகிஸ்தான் தொழிலதிபர்கள், அதிகாரிகள் கேட்டறிந்தனர் எனவும், புதிய ஆலோசனைகளை வழங்கினார் எனவும் கூறப்படுகிறது.  இந்த ஆலோசனை மூலம்  அந்நாட்டு ஐடித்துறை புத்துணர்ச்சி பெறும் எனவும் கூறுகின்றனர். இருந்தாலும் இது தொடர்பானா அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் வரை நாம் எதையும் உறுதி செய்ய முடியாது. தகவல் வெளியாகும் வரை காத்திருப்போம்.

Exit mobile version