ரோட்டரி கிளப் மூலம் பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்ய ஜெர்மன் நாட்டிலிருந்து ஆயிரம் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன், 10 மாவட்டங்களை சேர்ந்த 35 ஆசிரியர்களுக்கு, கனவு ஆசிரியர் விருது வழங்கி கொளரவித்தார். மேலும், சிறப்பாக செயல்பட்ட 10 பள்ளிகளுக்கு, புதுமை பள்ளிக்கான விருதையும் வழங்கினார்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கு சீறுடை மாற்றப்பட்டுள்ளதாகவும், 1 முதல் 5 வரை மற்றும் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு இரண்டு வித சீறுடை அடுத்த ஆண்டு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் செப்டம்பர் மாதத்திற்குள் உருவாக்கித் தரப்படும் என்று கூறிய அவர், பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்ய ரோட்டரி கிளப் மூலம் ஜெர்மனி நாட்டிலிருந்து ஆயிரம் வாகனங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் வாகனம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.