துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து 2-ம் கட்ட விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22ஆம் தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. அசாதாரண சூழலை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. இந்த ஆணையத்தின் முதல்கட்ட விசாரணை கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இது குறித்து விசாரணை நடத்த, துப்பாக்கிச்சூட்டின் போது சம்பவ இடத்தில் இருந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் 10 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்தநிலையில் ஒரு நபர் ஆணையத்தின் 2ஆம் கட்ட விசாரணை தொடங்கி உள்ளது. இதற்காக 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற விசாரணையின் போது 5 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இரண்டாம் நாளான இன்று 7 பேருக்கும், 3ஆம் நாளான நாளை 5 பேருக்கும் விசாரணைக்கான சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Exit mobile version