தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் கோலகலமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இந்தாண்டு, வரும் நவம்பர் 6 ஆம் தேதி கொண்டப்படுகின்றன. இதனால், தீபாவளி பண்டிகையை கொண்டாடச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக, பல்வேறு வசதிகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து நவம்பவர் 3, 4, 5 ஆகிய நாட்களில், நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேருந்துகள் வீதம் 12 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், தீபாவளியை முன்னிட்டு, மற்ற மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 22 ஆயிரம் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல கோயம்பேடு, தாம்பரம், அண்ணாநகர், ஊரப்பாக்கம் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.