விருது நகரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள ராணுவம் வெற்றி பெற அன்று இருந்த மத்திய காங்கிரஸ் அரசும், கருணாநிதி தலைமையிலான திமுக அரசும்தான் பெரிதும் உதவியதாக ராஜபக்சே தனியார் தொலைகாட்சியில் பேசியதை நினைவு படுத்தினார் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி
முந்தைய தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிரான நெல்லை கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் திருவாரூரில் இருந்து திருட்டு இரயில் ஏறி வந்தவர் தான் கருணாநிதி என்று குறிப்பிட்டார்.
போரை நிறுத்தா விட்டால் மத்திய அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெறுவோம் என ஏன் கருனாநதி யும் ஸ்டாலினும் கூறவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த 50 ஆண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான் என்றும், அதிமுக அரசை குற்றம் சொல்ல ஸ்டாலினுக்கு அறுகதை இல்லை
என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருவாரூர் திருப்பங்குன்றம் இடைத் தேர்தலில் ஆர் கே நகர் இடைத் தேர்தல் போல நாங்கள் ஏமாற மாட்டோம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.