திருமணத்திற்காக 7 வயது சிறுமி விற்கப்பட்ட கொடூரம்.

நைஜீரியா நாட்டில் கடனை அடைப்பதற்காக சிறுமிகளை விற்பனை செய்யும் அவலம் நடந்து வருகிறது.

நைஜீரியாவில் பெசவோ இன மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

ஏழ்மையில் உள்ள இவர்கள், கடன் வாங்குவதும் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடனை திருப்பிச் செலுத்த முடியாத போது இவர்கள் தங்கள் பிள்ளைகளை விற்பனை செய்து விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்படி விற்கப்பட்ட ஒரு சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார். அவர் தனது கதையை கண்ணீர் மல்க வெளியுலகிற்கு தெரிவித்ததால் இந்த பழக்கம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதில், தம்முடன் உறவு கொள்ள வேண்டும் என்பதற்காகவே முதியவர் ஒருவர் தம்மை விலை தந்து வாங்கியதாக கூறியுள்ளார். ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் வலுக்கட்டாயமாக தன்னை பிடித்திருக்க, அந்த முதியவர் தம்மிடம் உறவு வைத்துக் கொண்டார் எனவும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

டோரொத்தி என்ற அந்த சிறுமி தமக்கு தாத்தா வயதுடைய நபருடன் நிர்பந்தப்படுத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.
டோரொத்தி முதன் முறையாக கருவுறும்போது அவருக்கு 12 வயது கூட நிரம்பவில்லை.

இதனிடையே கொடூரத்தின் உச்சமாக, முதியவர் ஒருவருக்கு விற்கப்பட்ட 7 வயதே நிரம்பிய ஒரு சிறுமியை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

Exit mobile version