தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
தென் மேற்கு வங்ககடலில் இருந்து, தெற்கு மத்திய மஹாராஷ்டிரா வரை, உள் தமிழகம் மற்றும் உள் கர்நாடகா வரையிலான வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் 5 செமீ மழை பெய்துள்ளது.