தமிழகத்தில் நோய்த் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, வெண்மைப் புரட்சியில் மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாகவும், இங்கு, ஆண்டுக்கு 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையாக சோதனைக்கு உட்பட்ட பிறகே, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், வரும் 25-ம் தேதி, 770 ஆய்வக உதவியாளர்களுக்கான பணி ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார் எனவும் தெரிவித்தார்