தனியாரை மிஞ்சும் அரசு பள்ளிகள்

ஊராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடப்பணியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜையுடன் தொடங்கிவைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் மனிதநேயம் மிக்கவர்கள் பலர் உதவ முன்வந்துள்ளதாக கூறினார். இதனால் தமிழகத்தில் உள்ள 57 ஆயிரம் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். மேலும் சித்தோட்டிருந்து கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக 25 கண்டெய்னர் லாரிகள் மூலம் 2 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிவாரணப்பொருள்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும் நல்லாசிரியர் விருத்துக்கு 22 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க மத்திய அரசிடம் கோரப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version