பழனியில் தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அமர பூண்டி, பாப்பம்பட்டி, தொப்பம்பட்டி, ஆயக்குடி, கள்ளிமந்தயம், கீரனூர், ஆர். வாடிப்பட்டி உள்பட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளில் தக்காளி விவசாயம், வழக்கத்தை விட அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளன. இதனால், தக்காளியை மிகவும் குறைந்த விலைக்கே விவசாயிகளிடமிருந்து , வியாபாரிகள் வாங்கி வருகின்றனர்.
இதன் காரணமாக, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தக்காளி விலை ஒரு கிலோ 2 ரூபாய் , 3 ரூபாய் என கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், தக்காளி பறிப்பவர்களுக்கு தினக் கூலி கொடுக்க கூட முடியாத அளவுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.