டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிரந்தரபணி வழங்காததை கண்டித்து ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம்!

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிறப்பு தலைவர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, டாஸ்மாக் பணியாளர்களின் பணிநிரந்தர கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால், சுமார் 5 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் பணிக்கு வந்த பின் இளம்வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கரூர் குரூப் என்ற பெயரில் அன்றாடம் டாஸ்மாக் பணியாளர்களின் பணம் பறிக்கப்படுவதாகவும், இதுகுறித்து அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இவைகளை கண்டித்து மார்ச் 2ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version