சைமா விருது – விஜயின் “மெர்சல்” படத்திற்கு 5 விருதுகள்!

துபாயில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய திரைப்பட சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில் விஜயின் மெர்சல் படத்திற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவான சைமா, ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தாண்டுக்கான விழா துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், விஜய் நடித்த “மெர்சல்” படத்திற்கு சிறந்த இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என 5 விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயனுக்கும், மாதவனுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவிற்கும், அதிதி பாலனுக்கும் கொடுக்கப்பட்டது. குறிப்பாக, வாழ்நாள் சாதனையாளர் விருது பி.சுசிலாவிற்கு வழங்கப்பட்டது. நடிகை ஹன்சாகாவிற்கு இளம் தலைமுறைக்கான ‘யூத் ஐகான் விருது’ வழங்கப்பட்டது. “விக்ரம் வேதா” இந்தாண்டுக்கான சிறந்த படத்திற்கான விருதினை தட்டிச் சென்றது.

 

Exit mobile version