மெர்சல் படத்துக்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது

மெர்சல் படத்திற்கு சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதை நடிகர் விஜய் பெற்றுக்கொண்டார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம், மெர்சல். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மெர்சல் படத்தின் வசூல் 250 கோடி ரூபாயைத் தாண்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2014 முதல் வழங்கப்பட்டு வரும் INTERNATIONAL ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற சர்வதேச விருதுப் பரிந்துரைப் பட்டியலில், இரு பிரிவுகளில் விஜய் இடம்பெற்றார்.

இதில் சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு அறிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, தற்போது அந்த விருதை விஜய் பெற்றுக்கொண்டார்.

Exit mobile version