சென்னையில் வெள்ள பாதிப்புக்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
கனமழை மற்றும் வெள்ள பாதிப்பை தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகதில் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சென்னையில் வெள்ள பாதிப்புகளை முன்கூட்டியே கண்டிறிய வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்மூலம் 5 நாட்களுக்கு முன்பே வெள்ள பாதிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய தொழில்நுட்ப மையம் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அணைகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த முறை சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட அனுபவங்களை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
கடலில் புயல் காற்று வீசுவதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.